Tuesday, June 2, 2009

அக்கா உங்களுக்காக!!!!!!!!!!!!!

செவ்வானம் போல்
உண்மையாக சிவக்கும்
உங்கள் கன்னங்களால் தான்
சிரிப்புக்கு பெருமை!

மயில்தோகை போல்
அழகாக விரிந்துகிடக்கும்
உங்கள் கூந்தலால்தான்
மென்மைக்கு பெருமை!

கார்மேகம் போல்
உங்கள் இமைகளில்
இணைந்திருக்கும் மையால் தான்
கருமைக்கு பெருமை!

புல்வெளியில் பனித்துளி போல்
உங்கள் மூக்குத்தி

உறைபனி போல் குளிரவைக்கும்
உங்கள் பேச்சு

கானல் நீர் போல்
உங்கள் கோபம்!

இப்படி
இயற்கை பொறாமை கொள்ளும்
உங்களின்
தம்பியாக இருப்பதால்
எனக்கு பெருமை!

அக்கா நீங்கள் என்றும்

அன்பிற்கு அர்தமாய்,
பாசத்திற்கு பாதையாய்,
நேசத்திற்கு தோழியாய்,
நட்பிற்கு குழந்தையய்,
கோபத்திற்கு எதிரியாய்,

மாறாமல்
என்னை மறவாமல்........

உங்கள் வாழ்க்கை கோலத்தில்
ஓர் புள்ளியாய்!

அன்புடன்,
சரவணன்