Monday, October 26, 2009

Tuesday, June 2, 2009

அக்கா உங்களுக்காக!!!!!!!!!!!!!

செவ்வானம் போல்
உண்மையாக சிவக்கும்
உங்கள் கன்னங்களால் தான்
சிரிப்புக்கு பெருமை!

மயில்தோகை போல்
அழகாக விரிந்துகிடக்கும்
உங்கள் கூந்தலால்தான்
மென்மைக்கு பெருமை!

கார்மேகம் போல்
உங்கள் இமைகளில்
இணைந்திருக்கும் மையால் தான்
கருமைக்கு பெருமை!

புல்வெளியில் பனித்துளி போல்
உங்கள் மூக்குத்தி

உறைபனி போல் குளிரவைக்கும்
உங்கள் பேச்சு

கானல் நீர் போல்
உங்கள் கோபம்!

இப்படி
இயற்கை பொறாமை கொள்ளும்
உங்களின்
தம்பியாக இருப்பதால்
எனக்கு பெருமை!

அக்கா நீங்கள் என்றும்

அன்பிற்கு அர்தமாய்,
பாசத்திற்கு பாதையாய்,
நேசத்திற்கு தோழியாய்,
நட்பிற்கு குழந்தையய்,
கோபத்திற்கு எதிரியாய்,

மாறாமல்
என்னை மறவாமல்........

உங்கள் வாழ்க்கை கோலத்தில்
ஓர் புள்ளியாய்!

அன்புடன்,
சரவணன்

Monday, May 18, 2009

ஓர் அனாதையின் இறுதி நொடி

பெண்ணே!கால்கள் ஊனம் என்றேன்,
உன் கரம் கொடுதாய்,
எழுந்து நின்றேன்.

பார்வை இல்லை என்றேன்,
உன் தோள் கொடுத்தாய்
பிடித்து நகர்ந்தேன்!!!!!!

தோழியே!என் பெற்றோரை பார்த்ததில்லை,
நான் வருந்தாத நாட்கள் இல்லை!!!!!!!!!
என் நினைவுத் தெரிந்து நான் சிரித்ததில்லை

இன்று முதல் முறை உன்தன் மடியில்!!!!!!!

அன்பின் அற்த்தத்தை உணர்ந்து விட்ட
ஆனந்தத்தில்,
நட்பின் ஆழத்தை புரிந்துகொண்ட
பூரிப்பில்,
சிர்த்துக்கொண்டே!!!!!!
பிணமாய்!!!!!!!!!!!

Wednesday, May 13, 2009

அவல நிலை

விழிகள் இருந்தும்,
பார்வை இருந்தும்,
செவிகள் இருந்தும்,
கேட்கும் திறன் இருந்தும்,
ஊனமாய்!!! !! !!! !!

உடல் இருந்தும்,
உயிர் இருந்தும்,
நடை பிணமாய்!!!!!!

ஓட்டு போடும் வயதிருந்தும்,
அடையாள அட்டை இருந்தும்,
ஆள்காட்டி விரலிருந்தும்,

உரிமையின்றி நிற்கின்றேன்,
இது தான் குடியுரிமையோ!!!!!!!!!!

என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: ஒச்சப்பனோடு ஒரு நாள்

என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: ஒச்சப்பனோடு ஒரு நாள்

Tuesday, May 12, 2009

தனிமையில் காதலி

கண்களுக்கு மை போடுகையில்
உன்னை மையாக நினைத்தேன்,
நான் கலங்க நீ கரைவாய்!
என் கண் கசக்க நீ கலைவாய்!

கைகளுக்கு மருதாணி போடுகையில்
உன்னை வர்ணமாக நினைத்தேன்,
என் கைகளில் நீ இணைவாய்!
நான் சிரிக்க நீ சிவப்பாய்!

ஏன் என்னை இப்படி மாற்றினாய் ?

கேட்க என் இதழ்கள் விரிய,
என் விழிகள் உன்னை தேடின
உன் தோள்களை தினமும் நாடின,
என் அறையின் கதவுகள் மூடியே கிடக்கின்றன,
திறப்பதற்க்கு நீ இல்லை,
திறந்தால் உன் நினைவுகளின்
தொல்லை!!!!!!!!!

உயிரே!என்று வருவாய்
தனித்திருகின்றது என் உடல்!

Saturday, May 9, 2009

சிங்கல கிரகணம்

சூழ்ந்தது மேகம்,
வீழ்ந்தது தேகம்!
சிங்கல படையே! ஏன் இந்த கோபம்,
இது உன் நாடிற்க்கு அழியா சாபம்,
கருவறையே இன்று கல்லறை ஆகிவிட்டதே,
காக்க வேண்டிய கைகளே காவுவாங்குகின்றதே,
ஈழத்தமிழர்களின் உதிரம் உன் மண்ணுக்கு பிடித்த பானமோ,
இப்படி குடிக்கின்றதே திகட்டவில்லையோ,
இன்று உன் மண்ணுக்கு உரமாய் என் தமிழர்கள்!!!!
நாளை உன் உணவில் மணக்கும் அவன் சாபங்கள்...