Saturday, August 7, 2010

காதல் படுத்தும் பாடு

வானத்தில் நிலவும்
உலவும் மேகமும்
ஓடிப் பிடித்து விளையாடுகின்றது.

"அது போல் தான்
உன் கூந்தலும்".

நீ தலை துவட்டும் போதும்
தலை வாரும் போதும்
முன்னால் வந்து
தொட்டுச் செல்கிறது

உன் முகத்தை.................................

காதல் படுத்தும் பாடு

ஒரு முறை
உன் கூந்தலை
விளையாட்டாய் இழுத்து விட்டேன்
கோபத்தில்
திட்டிச் சென்றாய்

ஏன் ?

என்று கேட்ட போது

"நீ ஒவ்வொரு முறை
என் மடி சாய்கையில்
உன் முகத்தை வருடும்
நம் காதல் குழந்தை
கூந்தல்".

என்றாய்......................

காதல் படுத்தும் பாடு

காற்றின் வருடலைப் பூவிடம் கேட்டேன்
அது
பூத்துச் சிரித்தது.

உன் மூச்சின் வருடலை என்
இதயத்திடம் கேட்டேன்
உடல்
வியர்த்துக் கொட்டியது


இது தான் உணர்ச்சியோ ??????